மல்யுத்த வீராங்கனைகள்
மல்யுத்த வீராங்கனைகள் twitter page
இந்தியா

‘இனி தெருக்களில் இறங்கி போராட்டம் இல்லை’ - மல்யுத்த வீராங்கனைகள் முடிவு!

PT WEB

மல்யுத்த சங்க தலைவர் பிரிஜ் பூஷன் சிங் சரணுக்கு எதிரான போராட்டம் இனி நீதிமன்றங்களில் தொடரும் என மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக ‘இனி சாலைகளில் இறங்கி போராட போவதில்லை’ என மல்லியுத்த வீராங்கனைகள் தினேஷ் போகாட் மற்றும் சாக்க்ஷி மலிக் தெரிவித்துள்ளனர்.

மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவும் “இனி சாலைகளில் போராட்டம் நடத்தப் போவதில்லை. போராட்டத்தை நீதிமன்றங்களில் தொடர போவகிறோம்” என தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜந்தர் மந்தர் மற்றும் ஹரிதுவார் போன்ற இடங்களில் நடந்த போராட்டங்கள் கைவிடப்படுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் சில காலங்கள் சமூக வலைத்தளங்களில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாகவும் வீரர் வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

மல்யுத்த வீரர்கள், பிரிஜ் பூஷன் சரண் சிங்

முன்னதாக பிரிஜ் பூஷன் சிங் சரண் செல்வாக்கு மிக்க பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அவர் மீது நடவடிக்கை பாயவில்லை என குற்றச்சாட்டு தொடர்ந்த நிலையில், டெல்லி போலீஸ் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. விரைவில் அந்த வழக்கின் விசாரணை நடைபெறும் என விசாரணை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் மல்லியுத்த வீராங்கனைகள் ஏற்கெனவே தங்கள் போராட்டத்தை இடைக்காலமாக கைவிட்டிருந்தனர். தற்போது போராட்டத்தை முற்றிலும் கைவிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே பிரிஜ் பூஷன் மீது 18 வயதுக்கு குறைவான சிறுமி ஒருவர் அளித்த புகாரை திரும்பப்பெற்றதால், அந்த வழக்கு மட்டும் கைவிடப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் ரயில்வே பணிகளுக்கு திரும்பினர். அதேபோல மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்திய பிறகு இடைக்காலமாக தங்களுடைய போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

நீதிமன்றம் தன் கடமையை செய்யும் - பிரிஜ் பூஷன் BrijBhushan

பிரிஜ் பூஷன் சிங் சரண் குடும்பத்தினர், குறிப்பாக அவரது மகன், மல்யுத்த சங்க தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் எனவும் சங்கத்தில் இனி சரணின் தலையீடு இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இனி பிரிட்ஜ் பூஷன் சிங் சரணுக்கு எதிரான போராட்டம் நீதிமன்றங்களில் தொடரும் என மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் முடிவு செய்துள்ளனர்.