இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் நடைமுறைகளைக் கண்டு உலகமே வியப்படைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மாதம்தோறும் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று, ‘மான் கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் உரையாற்றி வருகிறார். அதன்படி, இன்று உரையாற்றி அவர், “எனது அருமை குடிமக்களே..! 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் தமது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. அன்றைய தினம் தான் நமது குடியரசு நாள். நேற்று நாம் அதை சிறப்பாக கொண்டாடினோம். ஆனால் நான் இன்று சிலவற்றை பேச விரும்புகிறேன். நமது தேசத்தின் ஜனநாயக ஒற்றுமை குறித்து பார்க்க வேண்டும். அது நமது குடியரசை விட பழமையானது.
நான் இந்திய தேர்தல் ஆணையத்தை நினைவு படுத்துகிறேன். 25ஆம் தேதி ஜனவரி அன்று தான் தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்டது. அந்த தினத்தை நாம் தேசிய வாக்காளர்கள் தினமாக கொண்டாடுகிறோம். இந்திய தேர்தல் நடைமுறைகள் உலகத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்து முறைகள் இந்தியர் என்ற வகையில் பெருமையடைய செய்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஷ் பிறந்தது ஜனவரி 23ஆம் தேதி. இந்தத் தருணத்தில் அவரை நினைவு கொள்ள வேண்டும்.
விண்வெளி ஆராய்ச்சித் துறையில் நமது நாடு பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. தொடர்ந்து சாதனைகள் புரிந்து வருகிறது. நான் எப்போது குழந்தைகளிடம் கூறுவது நன்றாக விளையாடுங்கள் என்பது தான். இந்தியாவில் அதிக இளம் வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நமது விளையாட்டுத்துறை மிகவும் வலிமையடைந்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் சிறந்த விளையாட்டு வீரர்கள் உருவாகுவதை காண முடிகிறது” என்றார்.