ஆயுதம் ஏந்தி போரிடும் பணியில் பெண்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, ராணுவத்துக்கு பெண்களை தேர்ந்து எடுப்பதற்கான பணி விரைவில் தொடங்கும் என்றும் முதலில் ராணுவ போலீஸ் படைக்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என்றும் பிறகு பயிற்சி அளிக்கப்பட்டு போர்முனைக்கு அனுபப்படுவார்கள் என்றும் இதுபற்றி அரசுடன் பேசி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்திய ராணுவத்தில் பொறியியல், மருத்துவம், கல்வி, சட்டம் உள்ளிட்ட சில பிரிவுகளில் மட்டுமே பெண்கள் பணியாற்றுகிறார்கள். போரிடும் பணிகளில் ஈடுபடுத்தப்படவில்லை.
ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், நார்வே, சுவீடன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே ராணுவத்தின் போர்ப்படை பிரிவில் பெண்கள் இருக்கிறார்கள்.