Women Reservation Bill
Women Reservation Bill pt web
இந்தியா

தாக்கல் ஆனது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா; ஏன் இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் தெரியுமா?

PT WEB

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் முதல் அலுவலக மசோதாவை தாக்கல் செய்தார் சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால். நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நாடாளுமன்றத்தை பொறுத்தவரை மகளிர் சதவிகிதம் மிகவும் குறைவாக உள்ளது. அதாவது, மக்களவையில் மொத்தம் உள்ள 545 இடங்களில் 82 மட்டுமே மகளிர். அதாவது, 6.6%. மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 238 இடங்களில் 31 மட்டுமே பெண்கள், 7.6%. தற்போது மகளிர் 10% கூட இல்லை. ஆகவே 33% என்பது மிகப்பெரிய மாற்றமாக இருக்கும்.