nirmala sitharaman
nirmala sitharaman pt web
இந்தியா

மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவேச பேச்சு.. அமைதிப்படுத்திய சபாநாயகர்!

PT WEB

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் முதல் அலுவலக மசோதாவை தாக்கல் செய்தார் சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால். நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கு பட்டியலினத்தவருக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிருக்கு தொகுதிகள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். மகளிருக்காக ஒதுக்கப்படும் தொகுதிகள் தேர்தலுக்கு தேர்தல் வேறுபடும்.

இந்நிலையில் மாநிலங்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். தங்கள் கட்சியும், தங்கள் அரசும் பெண்களுக்கு உரிய அதிகாரத்தை அளித்துள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பொதுப்படையாக பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவில்லை என்று எதிர்கட்சிகள் பேசக்கூடாது என்றும் அவர் ஆவேசமாக பேசினர்.