கேரளாவில் பெண்கள் பாதுகாப்பிற்கு நைட் வாக் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் தனியாகச் செல்லும் பெண்களிடமோ அல்லது சேர்ந்து செல்லும் பெண்களிடமோ தவறான முறையில் நடக்க முயலும் ஆண்களுக்கு பாடம் புகட்டும் வகையில் புதிய திட்டத்தை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது.
நைட் வாக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் நிர்பயா உயிரிழந்த தினமான டிசம்பர் 29-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் அதிகாலை ஒரு மணி வரை பெண்களின் நைட் வாக் என்ற இரவில் நடமாடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இத்தட்டத்தின்படி நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 100 மையங்களில் இரண்டு மூன்று பெண்கள் இரவு நேரங்களில் தெருக்களில் நடந்து சென்றனர்.