இந்தியா

’இதற்குத்தான் ஆண்களுக்கும் ஆணையம் கேட்கிறோம்’ - கீழே விழுந்த பெண்ணால் கொந்தளித்த Netizens!

JananiGovindhan

விபத்துகள் எப்போது எப்படி நடக்கும் என எவராலும் கணிக்கவே முடியாது. அதனால்தான் வண்டியை ஓட்டும்போது சாலையை பார்த்து மிகவும் கவனமாக இயக்க வேண்டும் என எவருமே கூறுவர்.

ஆனால் டூவீலர்களில் செல்வோர் சாலை விபத்துகளில் சிக்கினால் பெரும்பாலும் எதிரில் வருவோரை சாடுவதே வழக்கமான ஒன்றாக இருக்கும். அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் வைரலான வீடியோ மூலம் தெரிய வந்திருக்கிறது.

அந்த வீடியோவில், ஸ்கூட்டர் ஒன்றில் ஒரு நபரும், பெண்ணும் சென்றுக் கொண்டிருந்தபோது நடுரோட்டில் தவறி விழுந்திருக்கிறார்கள். ஆனால் அந்த ஸ்கூட்டரில் வந்த பெண், பின்னால் வந்த பைக் ஓட்டியிடம் உங்களால்தான் கீழே விழுந்தோம், ரோட்டை பார்த்து வர முடியாதா எனக் கேட்டு சண்டையிட்டிருக்கிறார்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் பின்னால் பைக்கில் வந்த அந்த நபரின் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்ட கேமிராவில் பதிவாகியிருக்கிறது. ஸ்கூட்டரில் வந்த பெண் சண்டையிட்டதை அடுத்து, “உங்கள் வண்டியை தொடவே இல்லை. அதனை என்னால் நிரூபிக்க முடியும்” என பைக்கில் வந்தவர் கூறியிருக்கிறார்.

தற்போது அந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு 9 லட்சத்துக்கும் மேலான நெட்டிசன்களின் கவனத்துக்கு சென்றிருக்கிறது. மேலும், இதுப்போன்ற காரணங்களுக்குத்தான் மகளிர் ஆணையம் போல, ஆண்களுக்கென தனியாக ஆணையம் ஏற்படுத்த வேண்டும் என பதிவிட்டு வருகிறார்கள்.

ALSO READ: