இந்தியா

தாடிய எடுக்க மாட்டியா? சல்மான் மீது வெந்நீரை ஊற்றிய நக்மா!

தாடிய எடுக்க மாட்டியா? சல்மான் மீது வெந்நீரை ஊற்றிய நக்மா!

Rasus

தாடியை எடுக்காத கணவன் மீது வெந்நீரை ஊற்றிய மனைவியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்தவர் சல்மான் கான் (32). இவர் மனைவி நக்மா கான் (25). இவர்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்தான் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த நாளில் இருந்தே சல்மானை இந்தி நடிகர் சல்மான் கான் மாதிரி ஸ்டைலாக இருக்கச் சொன்னார் நக்மா. ஆனால் மத நம்பிக்கை அதிகமுள்ள சல்மான் அவர் பேச்சைக் கேட்கவில்லை. வழக்கமான பைஜாமா, ஜிப்பா அணிந்து வந்துள்ளார். அவரை ஜீன்ஸ், டிசர்ட் போட சொன்னார் நக்மா. அதோடு அவரது நீண்ட தாடியையும் எடுக்கச் சொன்னார். சல்மான் மறுத்தார்.

தினமும் சொல்லி சொல்லி வெறுத்துப்போன நக்மா, நேற்றும் அதைச் சொன்னார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமான நக்மா, அடுப்பில் இருந்த வெந்நீரை தூக்கி வந்து சல்மானின் முகத்தில் வீசினார். இதை எதிர்பார்க்காத சல்மான் கதறி துடித்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் முகம் 20 சதவிகிதம் வெந்துவிட்டது என தெரிவித்த டாக்டர்கள், சிகிச்சை அளித்து வருகின்றனர். போலீசார் நக்மா மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.