இந்தியா

கடித்த பாம்பை பிடித்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்ற தாய், மகள்!

கடித்த பாம்பை பிடித்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்ற தாய், மகள்!

webteam

மும்பையில் தங்களைக் கடித்த பாம்புடன் தாயும் மகளும் மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மும்பை தாராவியில் உள்ள பால்கிபூர் என்ற பகுதியில் சுல்தானாகான் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வீடு  பூங்கா அருகே உள்ளதாலும் மும்பையில் மழை பெய்து வருவதாலும் பாம்புகள் தொல்லை இருந்துள்ளது. இந்நிலையில் சுல்தானாகான் தனது வீட்டில் குடும்பத்துடன்  உணவு உட்கொண்டு  இருந்துள்ளார். 

அப்போது அவரது மகள் தன்னை ஏதோ கடித்ததாக தெரிவிக்க, அது எலியாக இருக்குமென சுல்தானாகான் கூறியுள்ளார். ஆனால் அங்கிருந்து பாம்பு ஒன்று ஊர்ந்துள்ளது. பாம்பைக் கண்ட அனைவரும் பதறிப்போய் அச்சமடைந்துள்ளனர். உடனடியாக பாம்பை கையில் பிடித்த சுல்தானாகான் மகளை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். அவர்களுக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்துள்ளனர்.

இது குறித்து பேசிய சுல்தானாகான், ''அருகில் பூங்கா இருப்பதால் மழை காரணமாக பாம்பு வீட்டுக்குள் புகுந்துவிட்டது. எந்த வகையான பாம்பு என தெரிந்தால் மருத்துவர்களால் எளிதில் சிகிச்சை அளிக்க முடியும் என்பதால் பாம்புடன் மருத்துவமனைக்கு சென்றேன்'' எனத் தெரிவித்துள்ளார்.