உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இருந்து வெளியே வந்த பெண் ஒருவர், தனது காரை எடுக்க முற்பட்டார். அப்போது, மர்ம நபர்கள் சிலர், அந்தப் பெண்ணை துப்பாக்கியால் சுட்டனர். இதைப்பார்த்து, அங்கு வந்த ஹோட்டல் காவலாளியையும் மர்ம நபர்கள் சுட்டனர்.
இந்தக் காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி.கேமராவில் பதிவாகியுள்ளன. இக்காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.