இந்தியா

‘என் அம்மாவிற்கு அழகான துணை தேவை’ - வைரலான இளம்பெண் ட்வீட்

‘என் அம்மாவிற்கு அழகான துணை தேவை’ - வைரலான இளம்பெண் ட்வீட்

rajakannan

தன்னுடைய தாய்க்கு அழகான ஆண் துணை வேண்டும் என்று இளம் பெண் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாம் 21வது நூற்றாண்டில் வாழ்ந்து வந்தாலும் விதவை மற்றும் கணவனை பிரிந்து விவாகரத்து பெற்று வாழும் பெண்கள் மீதான சமுதாயத்தின் பார்வை இன்னும் பெரிய அளவில் மாறவேயில்லை. இப்படியான பெண்கள் மறுதினம் என்பது இன்றளவும் மிகப்பெரிய விஷயமாக உள்ளது. மற்ற பெண்களை போல் இவர்களை பார்ப்பதில்லை என்பதால், இவர்களின் எதிர்கால வாழ்க்கை பல நேரங்களில் கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்நிலையில்தான், இளம் பெண் ஒருவர் தன்னுடைய 50 வயது தாய்க்கு துணை வேண்டுமென ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டக் கல்லூரி மாணவியான அஸ்தா வர்மா தன்னுடைய ட்விட்டரில், “என்னுடைய அம்மாவிற்கு 50 வயதுடைய அழகான ஆண் துணையை தேடுகிறோம். வெஜிடேரியன், குடிப்பழக்கம் இல்லாதவர், எல்லோருக்கும் தெரிந்தவர் ஆக அவர் இருக்க வேண்டும்” என #Groomhunting என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டிருந்தார். 

அஸ்தா வர்மாவின் இந்த முயற்சிக்கு ட்விட்டரில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இதில் சிலரது ட்விட்டர் பதிவுகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். இந்த ட்விட்டர் பதிவு வைரலாகியுள்ளது.

இளம் பெண்ணின் இந்த ட்விட்டர் பதிவு பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.