இந்தியா

மேடையில் ராகுல் கன்னத்தில் முத்தமிட்ட பெண்

மேடையில் ராகுல் கன்னத்தில் முத்தமிட்ட பெண்

rajakannan

குஜரா‌த் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பங்கேற்ற ராகுல் காந்திக்கு பெ‌ண் ஒருவர் பா‌சத்துடன் முத்தமிட்டுள்ளார். 

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தேர்தல் பரப்‌புரையை‌ குஜராத் மாநிலத்தில் இருந்து இன்று தொடங்கினார். சிவப்பு வெங்காயம் எனப் பொருள்படும் லால் துங்கிரி என்ற பழங்குடி‌யின மக்கள் வசிக்கும் இடத்திலிருந்து ராகுல் தனது பரப்புரையைத் தொடங்கினார். 

இதே இடத்திலிருந்து 1980ல் இந்திரா‌ காந்தியும், 198‌4-ல் ராஜீவ் காந்தியும், 2004-ல் சோனியா காந்தியும் பரப்புரையை தொடங்கி ஆட்சியைப் பிடித்ததால், ராகுலு‌ம் தற்போது தனது பரப்புரையை இங்கிருந்து தொடங்கினார். 

இந்நிலையில், வால்சாட் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்‌ கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்திக்கு கட்சியின் பெண் நிர்வாகிகள் புடைசூழச் சென்று மாலை அணிவித்தனர்‌. அப்போது பெண் ஒருவர் ராகு‌லுக்கு திடீரெ‌ன கன்னத்தில் முத்த‌ம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.