இந்தியா

அசாம்: முதல்வருக்கு மாட்டிறைச்சி பரிசளிப்பதாக வாட்ஸ்அப்பில் பதிவிட்ட பெண் உடனடியாக கைது

அசாம்: முதல்வருக்கு மாட்டிறைச்சி பரிசளிப்பதாக வாட்ஸ்அப்பில் பதிவிட்ட பெண் உடனடியாக கைது

Veeramani

அசாமின் நல்பாரி மாவட்டத்தை சேர்ந்த பெண், மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு மாட்டிறைச்சியை பரிசளிப்பதாக வாட்ஸ் அப்பில் பதிவிட்டதால் உடனடியாக கைதுசெய்யப்பட்டார்.

"நேற்று ஒரு பெண் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் ஆட்சேபிக்கத்தக்க வகையில் பதிவேற்றினார். இது தொடர்பாக நாங்கள் வழக்குப் பதிவு செய்து, அப்பெண்ணை கைது செய் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார், ஏனெனில் து ஜாமீனில் விடுவிக்கக்கூடிய குற்றமாகும்என்று ஒரு உயர் போலீஸ் அதிகாரி கூறினார்.

அசாமில் சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டு செல்வதற்கும், மாட்டிறைச்சி விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்குமான 2021 ஆம் ஆண்டின் அசாம் கால்நடை பாதுகாப்பு சட்டத்தை மாநில அரசு தாக்கல் செய்த பின்னர் பதிவான முதல் கைது வழக்கு இதுவாகும். இந்த மசோதாவின்படி இந்து, சமண, சீக்கியர் மற்றும் பிற மாட்டிறைச்சி சாப்பிடாத சமூகங்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் கோவில்கள் அமைந்துள்ள 5 கி.மீ சுற்றளவில் மாட்டிறைச்சி விற்பனை செய்வதையும், வாங்குவதையும் தடை செய்ய இம்மசோதா முன்மொழிகிறது.

பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்ட புதன்கிழமை அந்த பெண் இறந்த பசுவின் புகைப்படத்தை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவேற்றியிருந்தார், இரண்டாவது படத்தில் பசுவின் இறைச்சியை முதலமைச்சருக்கு பரிசளிப்பதாகவும் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார்.

இதுபோன்ற 'ஆட்சேபகரமான பதிவுகள்' இரு சமூகங்களிடையே ஒற்றுமையை உருவாக்கும் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார், இதில் குற்றம் சாட்டப்பட்டவர் முன்னாள் உள்ளூர் பாஜக சிறுபான்மை பிரிவு தலைவரின் மகள் ஆவார். இந்த பதிவு தொடர்பாக விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) இரு சமூகங்களுக்கிடையில் வகுப்புவாத பிரிவினையை ஏற்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்தது.