கடந்த 10 நாட்களாக நீடித்த லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் சண்முகப்பா தெரிவித்துள்ளார்.
லாரிகளுக்கான காப்பீடு கட்டண உயர்வைத் திரும்பப்பெறக்கோரி கடந்த 30ஆம் தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இது தொடர்பாக மத்திய காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகளுடன் ஹைதராபாத்தில் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.