நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது.
கடைசி நாளில் முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால், இம்மசோதாவை மத்திய அரசு தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முத்தலாக் மசோதாவை மக்களவையில் நிறைவேற்றிய அரசு, மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாததால், நிறைவேற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நேற்றும் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. கடைசி நாளான இன்றும் மசோதாவை நிறைவேற்றிவிட அரசு தீவிரம் காட்டி வருகிறது. இன்றும் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால், தாமாகவே மசோதா அடுத்த கூட்டத்தொடருக்கு மாறிவிடும். இதனால், தேர்வுக்கு அனுப்புவதில்லை என்ற தன்னுடைய நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.