இந்தியா

இந்திய தூதரகப் பணியில் முதல் பெண் விங் கமாண்டர் அஞ்சலி சிங் 

webteam

இந்திய தூதரகங்களில் பணி அமர்த்தப்பட்ட முதல் பெண் விங் கமாண்டர் என்ற பெருமையை அஞ்சலி சிங் பெற்றுள்ளார். 

வெளிநாட்டுத் தூதரகங்களில் முப்படைகளில் ஏதேனும் ஒரு பிரிவைச் சேர்ந்த அதிகாரி பணியில் அமர்த்தப்படுவது வழக்கமாக இருந்தாலும் முதல்முறையாக விமானப்படையின் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் பிரிவைத் சேர்ந்த விங் கமாண்டர் அஞ்சலி சிங், மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகப் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

வழக்கமாக இப்பணிக்கு ஆண் அதிகாரிகள்தான் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில் முதல்முறையாக இப்பொறுப்புக்கு பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் வெளிநாட்டிலுள்ள இந்திய தூதரங்களில் பணி அமர்த்தப்பட்ட முதல் பெண் முப்படை அதிகாரி என்ற பெருமையை அஞ்சலி சிங் பெருகிறார். அஞ்சலி சிங் விமானப்படையில் 17 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 

இவர் எம்ஐஜி-29 ரக (MiG-29) ரக விமானத்தை இயக்கும் பயிற்சியை முடித்துள்ளார். வெளிநாட்டு தூதரகத்தில் விமானப் படையின் சார்பில் இருக்கும் அதிகாரி இந்திய விமானப்படை அந்த நாட்டில் பிரிதிநிதியாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.