இந்தியா

டெல்லியில் சற்றே குறைந்த காற்று மாசு ! காரணம் என்ன ?

டெல்லியில் சற்றே குறைந்த காற்று மாசு ! காரணம் என்ன ?

jagadeesh

டெல்லியில் காற்று வீசி வருவதால் அங்கு நிலவிய காற்று மாசு அளவு சற்று குறைந்துள்ளது.

காலை ஆறு மணியளவில் டெல்லியில் காற்று தரக் குறியீடு எண் 500ஐ கடந்திருந்தது. மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிர்வாக அலுவலகங்கள், குடியிருப்புகள் அமைந்துள்ள லோதி சாலையில் காற்று தரக்குறியீட்டு எண் 500 எனப் பதிவானது. 

இந்த நிலையில், மணிக்கு 20 முதல் 25 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் காற்று மாசு சற்று குறைந்து வருவதாக வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். காலை 10 மணியளவில் காற்று தரக்குறியீடு 407ஆக குறைந்து பதிவானது. நேற்றைய தினம் இதே நேரத்தில் 484ஆக பதிவாகியிருந்தது. மஹா புயல் காரணமாக நவம்பர் 7-ஆம் தேதி மற்றும் எட்டாம் தேதிகளில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் பரவலாக மழைபெய்ய வாய்ப்பிருப்பதால் காற்று மாசு குறையும் எனவும் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.