இந்தியா

எனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி

எனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி

webteam

உலகப் புகழ் பெற்ற கோடீஸ்வரரும் விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தின் தலைவருமான ரிச்சர்ட் பிரான்சன் த‌னது மூதாதையர்கள் தமிழகத்தின் கடலூரை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்‌ளார். 

இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன். இவர் 400-க்கும் அதிகமான தொழில் நிறுவனங்களை கொண்ட வெற்றிகரமான தொழிலதிபர். இவர் தொழில் நிமித்தமாக இந்தியா வந்துள்ளார். மும்பை - புனே இடையே அதிநவீன ஹைப்பர்லூப் போக்குவரத்து சேவையை ஏற்படுத்துவது குறித்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ்‌ தாக்கரேவுடன் பிரான்சன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசி‌ய அவர் தனது எள்ளுப்பாட்டியின் தாயின் பெயர் ஆரியா என்றும் அவர் கடலூரை சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆய்வகத்தில் அறிவியல் ரீதியான சோதனைகளில் இது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தங்கள் நிறுவன விமானங்களின் அடையாளச் சின்னமாக ஒரு பெண் படம் இருப்பதாகவும் அதற்கு ஆரியா என பெயரிட்டுள்ளதாகவும் பிரான்சன் தெரிவித்தார். இந்தியர்கள் எவரை பார்த்தாலும் அவர் தனது உறவினராக இருக்குமோ என தோன்றும் என்றும் பிரான்சன் குறிப்பிட்டார்.