இந்தியா

தொடர்ச்சியான இடஒதுக்கீடு வளர்ச்சி தருமா..?: சுமித்ரா மகாஜன் சந்தேகம்

Rasus

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் காலவரையறை இல்லாமல் இடஒதுக்கீட்டை வழங்குவதன் மூலம் நாடு வளர்ச்சி அடைந்துவிடுமா என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மக்களிடத்தில் சமூக ஒற்றுமையை உண்டாக்க இடஒதுக்கீட்டை 10 ஆண்டுகள் என்ற அடிப்படையில் அம்பேத்கர் கொண்டுவந்ததாக தெரிவித்தார். ஆனால் இப்போது என்ன நடக்கிறது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை இடஒதுக்கீடு முறை நீட்டிக்கப்பட்டு வருவதாக சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். இடஒதுக்கீடு நாட்டை வளப்படுத்தி விடுமா? வளர்ச்சியை தருமா? என்ற அவர், சமுதாயத்திலும், நாட்டிலும் சமூக ஒற்றுமையை உண்டாக்க அம்பேத்கரை பின்பற்ற வேண்டும் என்றார்.

மக்களிடத்தில் தேசப்பற்று உணர்வை பலப்படுத்தாத வகையில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது முடியாத விஷயம் எனவும் சுமித்ரா மகாஜன் குறிப்பிட்டுள்ளார்.