இந்தியா

அத்துமீறி தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி: பாக்.கிற்கு இந்தியா எச்சரிக்கை

அத்துமீறி தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி: பாக்.கிற்கு இந்தியா எச்சரிக்கை

webteam

இந்திய எல்லை பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதிகளில், பாகிஸ்தான் ராணுவத்தினர், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று ரஜவ்ரி மாவட்டத்தில் நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரரான நாயக் மொஹம்மத் நசீர் என்பவர் உயிரிழந்தார். மேலும், இன்று காலை முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் பிம்பர் கலி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு, இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதனிடையே, அடிக்கடி அத்துமீறி தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டால் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் என இந்திய ராணுவ ஜெனரல் ஏ.கே.பட், பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைவர் மேஜர் ஜெனரல் சயீர் சம்சாத் மிர்ஷாவிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.