இந்தியா

பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா

பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா

Rasus

பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு ‌உளவுத் தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கத் தயார் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

இந்தியா வந்துள்ள சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சலாம், பி‌ரதமர் மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தா‌கின. பிறகு இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சவுதி இளவசர், தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் தங்களின் கூட்டு தொடரும் எனக் குறிப்பிட்டார். தங்கள் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு பழமையான‌து என்றும் வலிமை வாய்ந்தது என்றும் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி பேசுகையில்,‌ பயங்கரவாத ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சவுதியுடன் ஒத்துழைப்பை பெருக்குவது குறித்து பேசியதாக தெரிவித்தார். இந்தியாவின் மிக முக்கிய நட்பு நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று என பிரதமர் தெரிவித்தார்.