இந்தியா

காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு - ராஜ்நாத் சிங் உறுதி

காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு - ராஜ்நாத் சிங் உறுதி

webteam

காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.

சீனாவை எல்லையாக கொண்டுள்ள மாநிலங்களின் பாதுகாப்பு குறித்த 3 நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சிக்கிம் மாநிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு பெல்லிங் என்ற பகுதியில் பேசிய ராஜ்நாத் சிங், காஷ்மீரில் குழப்பத்தை ஏற்படுத்தி இந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். காஷ்மீர், இந்தியாவின் ஒரு அங்கம் என்றும் அங்கு நிலவும் பிரச்னைக்கு இந்தியா நிரந்தர தீர்வு காணும் என்றும் அவர் உறுதியளித்தார்.