பசுக்களை வதைப்போரின் கை கால்களை உடைப்பேன் என உத்தரப்பிரதேச மாநில பாரதிய ஜனதா எம்எல்ஏ பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பசு கடத்தலுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் எம்எல்ஏ விக்ரம் சைனி இந்த கருத்தினை தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விக்ரம் சைனி, பசுக்களை அவமரியாதை செய்வோர் மற்றும் பசுக்களை வதைப்போரின் கை மற்றும் கால்களை உடைப்பேன் என பேசினார். ஏற்கனவே இது போல சர்ச்சைக்குரிய பேச்சினால் இவர் சிறை சென்றிருக்கிறார்.