எப்போதும் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பிக்கொண்டிந்த கணவரை, மனைவி திட்டியதால் அவரும் அவர் தோழியும் தற்கொலை செய்து கொண்டனர்.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள கிழக்கு மாரட்பள்ளியைச் சேர்ந்தவர் சிவகுமார். எலக்ட்ரீஷியன். இவருக்கு கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. சிவகுமார் எப்போதும் செல்போனில் மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருப்பாராம். இதனால் புதுமனைவிக்குக் கோபம். மனைவி சொல்வதைக் கேட்காமல் சிவகுமார் தொடர்ந்து வாட்ஸ் ஆப்-பிலேயே இருக்க, அவரைத் திட்டியுள்ளார் மனைவி. பிறகு சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் இரண்டு பேரும் சண்டை போட்டு வந்துள்ளனர். ஒரு நாள் சிவகுமாரின் ஃபோனை சோதனை செய் தார், மனைவி.
அப்போது வெண்ணிலா என்ற பெண்ணுடன் சிவகுமார் தினமும் அதிகமாக மெசேஜ் அனுப்பி பேசிக்கொண்டிருப்பது தெரியவந்தது. வெண்ணி லா, சிவகுமாரின் சிறு வயது தோழியாம். இதையடுத்து கணவனுக்கும் மனைவிக்கும் தகராறு முற்றியது.
மனமுடைந்த சிவகுமார் சனிக்கிழமை தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொண்டதைக் கேள்விபட்ட தோழி வெண்ணிலாவும் பூச்சி மருந்தைக் குடித்தார். அவரை அவர் உறவினர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.