இந்தியா

பெண் தோழியுடன் காரிலிருந்த பாஜக செயலாளர் - சரமாரியாக செருப்பால் அடித்து தாக்கிய மனைவி

Sinekadhara

தனது பெண் தோழியுடன் காரில் இருந்த பாஜக தலைவரை கையும் களவுமாக பிடித்த அவரது மனைவி சரமாரியாக தாக்கிய வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.

மோஹித் சோங்கர் ஒரு பாஜக தலைவர். இவர் புந்தேல்கண்ட் பகுதியின் பாஜக செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவருடைய மனைவி, மாமியார் மற்றும் உறவினர்கள் இவரை நடுரோட்டில் வைத்து செருப்பால் அடித்து சரமாரியாக தாக்கியதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மோஹித்துடன் இருந்த அவரது பெண் தோழியை கணவரான தொழிலதிபரும், மோஹித்தின் மனைவியும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த ஜுஹி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று இருதரப்பினரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து பாபுபூர்வா ஏசிபி அலோக் சிங் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்குப் பிறகே எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார். இதை வீடியோ எடுத்த மோஹித்தின் மனைவி இணையத்தில் வெளியிட்டவுடன் வெகு வேகமாக பரவிவருகிறது.