இந்தியா

இலங்கை அகதிகளை ஏற்க மறுப்பது ஏன்? - சரத் பவார் கேள்வி

இலங்கை அகதிகளை ஏற்க மறுப்பது ஏன்? - சரத் பவார் கேள்வி

webteam

குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் இலங்கையிலிருந்து வரும் அகதிகளை ஏற்க மறுப்பது ஏன்? என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் தலைவர்கள் பலரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டம் ஒருதலைபட்சமானது எனவும், மக்களின் குரலை மத்திய அரசு கேட்க மறுப்பதாகவும் காங்கிரஸின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் காங்கிரஸின் கூட்டணிக் கட்சித் தலைவரான சரத் பவார், குடியுரிமை சட்டதிருத்தம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் அதில் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கனிஸ்தானில் இருந்து வரும் அகதிகளை மட்டும் குடியுரிமை சட்டத்தின்கீழ் ஏன் அனுமதிக்கிறீர்கள்? என்றும், அதேசமயம் இலங்கையிலிருந்து வரும் அகதிகளை ஏன் அனுமதிக்கவில்லை? எனவும் வினவியுள்ளார்.