விவசாயிகள் மீது யார் கவனமும் அதிகம்படாத நிலையில் பிரபலங்கள் ஆதரவு கொடுத்தால் அவர்களின் பிரச்னை, சம்பந்தப்பட்டவர்களுக்கு வலுவாகச் சென்றடையும் என விவசாயிகளின் போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ் கூறினார்.
டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 2 வாரங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சி நிவாரணத் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
விவசாயிகள் பிரச்னை தொடர்பாக, டெல்லியில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை இன்று நடிகர் விஷால், பிரகாஷ் ராஜ், பாண்டிராஜ் உள்ளிட்டோர் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், விவசாயின் பிரச்னையை தமிழக விவசாயிகள் பிரச்னை; கர்நாடக விவசாயிகள் பிரச்னை என்றெல்லாம் பார்க்காமல் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் பிரச்னையாகப் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
விவசாயிகள் மீது யார் கவனமும் அதிகம்படாத நிலையில் பிரபலங்கள் ஆதரவு கொடுத்தால் அவர்களின் பிரச்னை, சம்பந்தப்பட்டவர்களுக்கு வலுவாகச் சென்றடையும் எனவும் தெரிவித்தார். மத்திய அமைச்சர் ஜேட்லி தங்கள் கோரிக்கை குறித்து கேட்டறிந்ததாகவும் கூறினார்.