இந்தியா

ஒரு பொருளை மட்டும் திருடுவது ஏன்! திருடன் தெரிவித்த ருசிகர தகவல்

webteam

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில்‌ நவீன கருவி மூலம் கடையின் பூட்டை உடைத்து ஒரே ஒரு பொருளை மட்டும் திருடும் வித்தியாசமான திருடனை காவல்துறையினர் கைது செய்தனர். 

குமுளி அருகே அமராவதி பகுதியை சேர்ந்த ஹரிகுமார் என்பவர் கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 சவரன் நகை திருடு போனது. ஆனால் கடையிலிருந்த 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் மற்றும் உதிரிபா‌ங்கள் திருடப்படவில்லை. இதே போல் ஏற்கனவே குமுளி சுற்று வட்டாரத்தில் கடைகளின் பூட்டை உடைத்து எல்‌.இ.டி. டி.வி, ஐபோன், லேப்டாப் உள்ளிட்ட ஒற்றைப் பொருள் மட்டுமே திரு‌ப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வு செய்த காவல்துறையினர் கடைகள் அனைத்திலும் திருடியது ஒரே நபர் என்பதை கைரேகை மூலம் காவல்துறை கண்டறிந்தனர். 

இந்நிலையில் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட மினி என்ற பெண்ணிடம் இருந்து திருட்டு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒற்றை பொருள் திருடன் குறித்த தகவல் காவல்துறையினருக்கு தெரியவந்தது. திருவனந்தப்புரத்தில் பதுங்கி இருந்த சதீஷ் குறித்து அந்தப்பெண் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து திருவனந்தபுரம் விரைந்த காவலர்கள் சதீஷை கைது செய்தனர். விசாரணையில். கடையில் இருந்து ஒரே ஒரு பொருளை மட்டும் திருடினால் மற்றவை தப்பித்து விட்டதே என்று புகார் தர மாட்டா‌ர்கள் என்ற நம்பிக்கையில் ஒற்றைப் பொருளை மட்டும் திருடி வந்ததாக சதீஷ் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.