இந்தியா

'தடை செய்யப்பட்ட பட்டாசுகளை ஏன் தயாரிக்கிறீர்கள்?' - உச்சநீதிமன்றம் கேள்வி

'தடை செய்யப்பட்ட பட்டாசுகளை ஏன் தயாரிக்கிறீர்கள்?' - உச்சநீதிமன்றம் கேள்வி

கலிலுல்லா

தடை செய்யப்பட்ட பட்டாசு ரகங்களை எதற்காக தயாரிக்கிறீர்கள் என பட்டாசு ஆலைகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வழக்கு ஒன்றின் விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், 'தடைசெய்யப்பட்ட பட்டாசு ரகங்களை எதற்காக தயாரிக்கிறீர்கள்? பெரிய சரவெடிகள் தடை செய்யப்பட்டும் அவை வெடிக்கப்படுவதை பார்க்கிறோம்.

அரசியல் கட்சிகளின் வெற்றிக் கூட்டங்கள், திருமணங்கள், திருவிழாக்கள், மதநிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கின்றனர்' என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், உச்ச நீதிமன்ற தடையை மீறி தயாரிக்கப்படும் பட்டாசுகள்தான் வெடிக்கப்படுகின்றனவா என விளக்கவும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.