இந்தியா

இந்தியாவில் பரவும் டெல்டா கொரோனா திரிபு கவலைக்கொள்ள வைக்கிறது: உலக சுகாதார நிறுவனம்

இந்தியாவில் பரவும் டெல்டா கொரோனா திரிபு கவலைக்கொள்ள வைக்கிறது: உலக சுகாதார நிறுவனம்

நிவேதா ஜெகராஜா

உலக சுகாதார நிறுவனத்தின் இந்த வார தொற்றுநோயியல் அறிக்கையில், ‘இந்தியாவில் கண்டறியப்பட்டிருக்கும் டெல்டா வகை கொரோனா திரிபு (பி.1.617.2 திரிபு), கவலை கொள்ளும் வகையில் இருக்கிறது. பிற கொரோனா திரிபுகள்கூட, தனது தாக்கத்தை குறைவாக காண்பிக்கிறது. ஆனால் இது மிக வேகமாக பரவும் தன்மையுடன், உயிரிழப்பு ஏற்படுத்தும் வகையில் ஆபத்தாக இருக்கிரறது’ எனக் கூறப்பட்டுள்ளது.

பி.1.617 திரிபு கொரோனா, இந்தியாவின் இரண்டாவது அலையின்போது ஏற்பட்டிருந்தது. இரண்டாவது அலையில், பல உயிர்சேதங்கள் ஏற்பட, இந்த டெல்டா கொரோனா திரிபு மிக முக்கிய காரணம் என சொல்லப்பட்டுள்ளது. பின்வந்த நாள்களில், இதிலேயே மூன்று வித மாறுதல்கள் ஏற்பட்டு, நோயின் தாக்கம் தீவிரமடைந்து வந்தது.

கடந்த மாதமே ஐக்கிய நாடுகளின் சுகாதார அமைப்பு, இந்த பி.1.617 வகை கொரோனா திரிபை ‘கவலைக்கொள்ள வேண்டிய திரிபு வகை (வி.ஓ.சி – Variant of Concern)’ என்று அறிவித்திருந்து குறிப்பிடத்தக்கது. அவர்கள் தற்போது, இந்த பி.1.617 திரிபில், மூன்று வித மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றில், ஒன்றை மட்டும் மேற்கோள்காட்டி அதுதான் இப்போதைக்கு வி.ஓ.சி.யின் கீழ் கொண்டு வரலாம் எனக்கூறியுள்ளனர். அந்த ஒரு மாறுதலுக்குட்பட்ட கொரோனா திரிபு - பி.1.617.2 வகை கொரோனா.

இது, பிறவற்றை விடவும் கூடுதல் பாதிப்புகளையும் சுகாதார சிக்கல்களையும் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தினரும் கூறியுள்ளனர். குறிப்பாக அதிக உயிரிழப்புகள், வேகமாக பரவுவது, தடுப்பூசி போட்டக்கொண்ட பின்னரும் ஏற்படுவது போன்ற சிக்கல்களை இந்த பி.1.617.2 திரிபு கொரோனாதான் ஏற்படுத்துகிறதாம்.

“பிற நாடுகளில் இந்த திரிபு பரவுகிறதா என்பதை கண்காணித்து வருகிறோம். தெரியவந்தால், துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேற்கொண்டு இந்த திரிபு பற்றிய ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு பிற ஆய்வுகளை விட உலக சுகாதார நிறுவனம் கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது” என ஐக்கிய நாடுகளின் அமைப்பு கூறியுள்ளது.