சுனிதா வில்லியம்ஸ் web
இந்தியா

யார் இந்த சுனிதா? இந்தியா ஏன் கொண்டாடுகிறது? பத்ம பூஷன் வென்றவரின் மிரட்டும் பின்னணி!

விண்வெளி நிலைத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் தொழில்நுட்ப கோளாரால் அங்கேயே சிக்கித்தவித்து 9 மாதங்களுக்கு பிறகு பூமி திரும்பியுள்ளார். அவரது வருகைக்காக இந்தியாவில் பூஜை நடத்தப்படுகிறது, ISRO பெருமிதம் தெரிவிக்கிறது. அவரின் கதை என்ன? பார்க்கலாம்..

PT WEB
சவால்கள் தான் வாழ்வை சுவாரசியப்படுத்துகின்றன.  அந்த சவால்களை கடந்து சாதிப்பதுதான் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது.
சுனிதா உதிர்த்தவார்த்தைகள் இவை..

யார் இந்த சுனிதா வில்லியம்ஸ்?

குஜராத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க விஞ்ஞானி தீபக் பாண்டியாவுக்கும், ஸ்லோவேனிய வம்சாவளியைச் சேர்ந்த போனிக்கும் 1965-ஆம் ஆண்டு மகளாக பிறந்தவர் சுனிதா வில்லியம்ஸ்.

பன்முக கலாசாரம் பொதிந்திருந்த ஒரு குடும்பத்தில் அங்கமாக வளர்ந்த  சுனிதாவுக்கு பூமிக்கு மேல் பல மைல் பறக்க வேண்டும் என்ற என்ற எண்ணம் சிறுவயதில் இருந்தது. அந்த கனவு தான் இன்று விண்வெளியை வீடாக்கிக் கொள்ளும் அளவுக்கு அவரை கொண்டு சென்றிருக்கிறது.

Sunita Williams - Butch Wilmore

அமெரிக்காவின் நீதம் என்ற இடத்தில் பள்ளிக்கல்வியை முடித்தவர். அமெரிக்க கடற்படை பயிற்சி மைய கல்லூரியில் இயற்பியல் அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பை 1987-ஆம் ஆண்டு நிறைவு செய்தார். 1995 -ஆம் ஆண்டு புளோரிடாவில் உள்ள
தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் மேலாண்மை படிப்பில் முதுகலை பட்டம் பெற்றார்.

சுனிதாவுக்கு அழைப்பு விடுத்த NASA!

பின்னர் கடற்படையில் சேர்ந்து சோதனை விமானியாக எல்லாம் பணியாற்றிய சுனிதா வில்லியம்ஸ்-ஸை 1998-ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தங்களுடன் பணியாற்ற தேர்வு செய்து அழைப்பு விடுத்தது.

இதன்பின்னர் 30 ஆண்டுகளாக விண்வெளி தொடர்பாக நாசா நடத்திய சோதனை மேல் சோதனையில் எல்லாம் சுனிதா சாதனை மேல் சாதனை படைத்தார். அதிக நேரம் விண்நடை மேற்கொண்ட வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரராக இருக்கிறார் சுனிதா.

இந்தியா ஏன் கொண்டாடுகிறது?

கிரகச்சுற்றுப்பாதையில் 608 நாட்கள் வசித்திருந்தது என்பது எத்தனை கடினமானது. சிந்தனைக்கு அப்பாற்பட்டது. அதனை சிரித்த முகத்துடனேயே செய்து முடித்திருக்கிறார் சுனிதா.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்ற விண்கலம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வான்வெளியிலேயே தங்கவிட்டது. எந்தப்பீதியும் காட்டாது விண்வெளியிலயே மையம் கொண்ட இந்த வான்தேவதை, சவாலை நிவர்த்தி செய்து மீண்டும் பூமிப்பந்தை நோக்கி பயணிக்கிறார். 

மரபு ரீதியான உறவுத் தொடர்பால் தான் இந்தியாவும் அவரை உறவுக்காரர்களில் ஒருவராக பார்க்கிறது .

தேசத்தின் மிகப்பெரிய கெளரவத்துக்கு உரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதை அவருக்கு வழங்கி அவரை கௌரவித்தது. 2008-ம் ஆண்டு இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருது சுனிதா வில்லியம்ஸுக்கு வழங்கப்பட்டது.