இந்தியாவில் முதலமைச்சர்கள் pt web
இந்தியா

இந்தியாவின் எந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சி? ஓர் பார்வை!

பிகார் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சி நடைபெறுகிறது என்ற விவரங்களை தற்போது பார்க்கலாம்.

PT WEB

பிகார் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சி நடைபெறுகிறது என்ற விவரங்களை குறித்துப் பார்க்கலாம்.

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒடிஷா, சத்தீஸ்கர், அசாம், உத்தராகண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தலைமையில்ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திரா, புதுச்சேரி, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் பாஜகவின் கூட்டணியில் உள்ள கட்சிகள் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றுள்ள நிலையில் நிதிஷ் குமார் முதல்வராக தொடர்வாரா என்பது விரைவில் தெரியவரும். இவ்வாறு, பாரதிய ஜனதா கட்சி 14 மாநிலங்களிலும் அதன், கூட்டணி கட்சிகள் 5 மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ளன.

இந்திய வரைபடம்

மறுதரப்பில் கர்நாடகா, தெலங்கானா, இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அதன்படி, காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் 3 மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கின்றன. மேற்கு வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸ், கேரளாவில் இடதுசாரி கூட்டணி, பஞ்சாப்பில் ஆம்ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. மிசோரமில் இசட் பி எம், சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆகிய கட்சிகள் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது.