இந்தியா

கோயில் பூசாரி வீட்டில் மூட்டை மூட்டையாக பணம்

கோயில் பூசாரி வீட்டில் மூட்டை மூட்டையாக பணம்

webteam

ஆந்திராவில் கோயில் பூசாரி ஒருவரின் வீட்டில் லட்சக்கணக்கில் பணம் ‌சிக்கியது.

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் ‌துனி நகர் பகுதியை சேர்ந்த கோயிலில் பூசாரியாக இருந்து வந்தவர் அப்பள சுப்பிரமணியம். இவர் அண்மையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார். அவருக்கு இறுதிச் சடங்குகளை உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் செய்தினர். பின்னர் அவர் வசித்து ‌வந்த வீட்டை உறவினர்கள் சுத்தம் செய்த‌னர்‌. 

அப்போது அங்கு பத்துக்கும் மேற்பட்ட மூட்டைகளில் பணம் இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து பணம் கணக்கிடும் இயந்திரம் கொண்டுவரப்பட்டு மூட்டைகளில் இருந்த ப‌ணம் எண்ணப்பட்டது. இதில் 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருந்தது தெரியவந்தது.