இந்தியா

’பிடிவாதம் பிடிக்கிறார் உன் அப்பா’: 10 வயது பேத்தியிடம் முலாயம்

’பிடிவாதம் பிடிக்கிறார் உன் அப்பா’: 10 வயது பேத்தியிடம் முலாயம்

webteam

சமாஜ்வாதிக் கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், தனது பேத்தியான 10 வயது டினா யாதவ்விடம் அகிலேஷ் பிடிவாதம் பிடிப்பதாகக் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் ஆளும் கட்சியான சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங்குக்கும், அவரது மகனும் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவுக்கும் இடையில் கட்சித் தலைமையை யார் கைப்பற்றுவது என்பது குறித்து மோதல் நீடித்து வருகிறது. கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னத்திற்கு சொந்தம் கொண்டாடி இருதரப்பும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளது. இந்த நிலையில், அகிலேஷ்-டிம்பிள் யாதவின் இளைய மகளாக டினா யாதவ்விடம் உனது தந்தை மிகவும் பிடிவாதம் பிடித்து வருகிறார் என்று முலாயம் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அகிலேஷ், ஆமாம் நான் பிடிவாதம்தான் பிடித்து வருகிறேன் என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.