இந்தியர்களின் வாட்ஸ்அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து, வாட்ஸ் அப் நிறுவனம் மத்திய அரசிடம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முக்கியமான அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்களின் வாட்ஸ்அப் தகவல்கள் இஸ்ரேலைச் சேர்ந்த நிறுவனம் உளவு பார்த்ததாக புகார் எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை வாட்ஸ்அப் நிறுவனமும் ஒத்துக்கொண்டது. இதுகுறித்து பதில் அளிக்குமாறு வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நோட்டீஸ் மீது பதிலளித்துள்ள வாட்ஸ் அப் நிறுவனம், தங்கள் தவறுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது. இதையடுத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழ்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.