இந்தியா

வாட்ஸ்-அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல்

வாட்ஸ்-அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல்

JustinDurai

கூகுள் பே, போன் பே போன்ற பணப்பரிவர்த்தனை செயலிகளைப் போன்று வாட்ஸ் அப் மூலமும் பணபரிவர்த்தனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகள் சோதனைக்குப் பிறகு, UPI அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை சேவையை வாட்ஸ் அப் அறிமுகம் செய்கிறது. வாட்ஸ் அப் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.

முதலில் UPI-யில் பதிவு செய்துள்ள 2 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெற முடியும் என தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள், வாட்ஸ் அப் செயலி மூலம் குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.