இந்தியா

புதிய விதிக்கு எதிராக 'வாட்ஸ் அப்' வழக்கு; தனிநபர் உரிமையில் தலையிடுகிறதா அரசு?

EllusamyKarthik

சமூக வலைத்தளங்கள், ஓடிடி பிளாட்பார்ம், செய்தி இணையத்தளங்களை கட்டுப்படுத்த புதிய ஒழுங்கு விதிமுறைகளை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. தவறான தகவல்களை பரப்பக் கூடிய முதல் நபர் யார்? என்பதை கண்டறிந்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசோ, நீதிமன்றமோ தனிநபரின் தகவல்களை கேட்கும் போது வழங்க வேண்டும் என புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விதிகளை ஏற்க சமூக வலைத்தளங்களுக்கு அரசு கொடுத்திருந்த மூன்று மாத கால அவகாசம் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் தான் அரசின் புதிய விதிக்கு எதிராக 'வாட்ஸ் அப்' வழக்கு தொடுத்தது. இந்த புதிய விதிமுறைகள் தனிநபர் ரகசிய காப்பு உரிமையில் தலையிடும் வகையில் இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் தனது மனுவில் தெரிவித்துள்ளது. 

இதே போல பேஸ்புக் நிறுவனம் அரசின் சில விதிமுறைகளுக்கு உடன்படுவதாகவும், சில விதிமுறைகளை ஏற்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. ட்விட்டர் நிறுவனமும் தனது கருத்தை இதுகுறித்து சொல்லியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறையின் 360 டிகிரி நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல்களை இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்...