இந்தியா

கூரை பிய்த்துக்கொண்டு... யானை விழுந்தால்?

கூரை பிய்த்துக்கொண்டு... யானை விழுந்தால்?

webteam

கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டுக் கொடுக்கும் என்பார்கள். ஆனா, கூரையை பிய்த்துக்கொண்டு குட்டி யானை ஒன்று விழுந்தால் என்னாகும்?

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு குட்டி யானை உள்ளே விழுந்ததால் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணும் அவரது கைக்குழந்தையும் உயிர் தப்பினர்.

கோழிப்பாலம் பகுதியில் வசிக்கும் யாஹூ என்பவரின் வீட்டருகில் ஒரு குட்டியுடன் இரண்டு யானைகள் வந்துள்ளன.

குட்டி யானை, யாஹூ வீட்டின் கூரை மேல் விளையாடும்போது பாரம் தாங்காமல் கூரையைப் பிய்த்துக்கொண்டு உள்ளே விழுந்துள்ளது.

இதில், பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை, அவரது தாயார் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் வெளியே இருந்த யானைகள் வீட்டின் கதவை உடைத்து குட்டி யானையைக் கூட்டிச் சென்றன.