கழிப்பறை, கொரோனா வைரஸ் எக்ஸ் தளம்
இந்தியா

கிராமப்புறங்களில் கோவிட் மரணம் குறைய காரணம் என்ன? ஆய்வில் புது தகவல்!

இந்திய கிராமப்புறப் பகுதிகளில் கோவிட் மரணங்கள் குறைவாக இருந்ததற்கு கணிசமான வீடுகளில் கழிப்பறை இல்லாமல் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம் என்று புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

PT WEB

இந்திய கிராமப்புறப் பகுதிகளில் கோவிட் மரணங்கள் குறைவாக இருந்ததற்கு கணிசமான வீடுகளில் கழிப்பறை இல்லாமல் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம் என்று புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

2020-21ஆம் ஆண்டுகளில், கொரோனா வைரஸ் மூலம் கோவிட் பெருந்தொற்று உலக நாடுகளை ஆட்டுவித்தது. இந்தியாவிலும் பலர் கோவிட் நோய் காரணமாக உயிரிழந்தனர். கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் கோவிட் மரணங்கள் அதிக எண்ணிக்கையில் பதிவாகின.

இதுதொடர்பாக புனேவைச் சேர்ந்த செல் அறிவியலுக்கான தேசிய மையம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. கழிப்பறைகளை நீர் ஊற்றி சுத்தப்படுத்துதல், கழிப்பறைகளில் உள்ள குழாய்கள், மூடப்பட்ட கழிவுநீர் வடிகால் அமைப்புகள் ஆகியவற்றின் மூலம் கொரோனா வைரஸ் வீடுகளில் முடங்கி இருந்தவர்களிடையே அதிகமாகப் பரவியதாகத் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ்

கிராமங்களில் கணிசமான வீடுகளில் கழிப்பறைகள் இல்லாததால் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்ததாக கூறப்படுகிறது. வைரஸ் பரவலின் பல்வேறு சாத்தியக்கூறுகளை ஆராய்வதே இந்த ஆய்வின் நோக்கம் என்றும் கழிப்பறைகளின் அவசியத்தை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது என்றும் செல் அறிவியலுக்கான தேசிய மையத்தைச் சேர்ந்த சேகர் மாண்டே தெரிவித்துள்ளார்.