நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் 23 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை முதல் அக்டோபர் 1- ஆம் தேதி வரை 18 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடரில் திமுக என்னென்ன விஷயங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறது என்பது குறித்து அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர். பாலு, மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்,
1.தேசிய கல்விக்கொள்கை 2020
2.சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020
3.நடப்பாண்டு ஒபிசிக்கான மருத்துவ இட ஒதுக்கீடு
4.ஒபிசி கிரிமி லேயர் அல்லாத பிரிவுக்கு வருமானம் 8 லட்சத்திலிருந்து 15 லட்சமாக உயர்த்துவது குறித்து
5.மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை வழங்காதது குறித்து
6.நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள மாணவர்கள் தற்கொலைகள் மற்றும் அதை தடை செய்வது குறித்து
7.கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழிலாளர்களுக்கு வங்கி கடன் மற்றும் வட்டி விகிதத்தை மேலும் 6 மாதங்களுக்கு தள்ளுபடி செய்வது குறித்து
8. சீன ராணுவ அத்துமீறலை தடுக்க சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்துவது குறித்து
9.விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அமல்படுத்த இருக்கும் சென்னை டூ சேலம் 8 வழிச்சாலைத்திட்டத்தை கைவிடுவது குறித்து
10.சிறு மற்றும் குறு தொழில்கள் மூடப்படுவதால் வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து
11.கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் அரசு தவறாக கையாண்ட விதம் குறித்து
12. மீன்பிடிப்பதற்கான மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து என குறிப்பிட்டுள்ளார்.