இந்தியா

என்னதான் நடக்கிறது கேரளாவில் ? கடுப்பான உச்சநீதிமன்றம்

என்னதான் நடக்கிறது கேரளாவில் ? கடுப்பான உச்சநீதிமன்றம்

கேரளாவில் என்ன தான் நடக்கிறது, பாதிரியார்களே பாலியல் வன்கொடுமை செய்து வருகிறார்களா ? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள சர்ச்சில் அம்மாநிலத்தை சேர்ந்த நால்வரும் டெல்லியை சேர்ந்த ஒருவரும் பாதிரியாராக உள்ளனர். இந்நிலையில் சர்ச் நிர்வாகத்திற்கு திருவலாவைச் சேர்ந்த ஒருவர் எழுதிய கடிதம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. அதில் பாவமன்னிப்பு கேட்க வந்த தனது மனைவியை 5 பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த விவகாரம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இவ்விவகாரத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இது குறித்த ஆடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில் அதை அடிப்படையாக கொண்டு தாமாக முன்வந்து இவ்விவகாரத்தில் தீர்வு காண உட்படுத்த தேசிய மகளிர் ஆணையம் முடிவு செய்தது.  இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அம்மாநில காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹரா உத்தரவிட்டார். இதனையடுத்து நான்கு பாதிரியார்களில் இரண்டு பேரை போலீஸார் கைது செய்து , பின்பு அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்.

இதில் பாதிரியார்கள் ஜாப் மேத்யூ, ஜான்சன் வி மேத்யூ ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாதிரியார்கள் சோனி வர்க்கீஸ், ஜெய்சி கே ஜார்ஜ் ஆகியோர் முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மற்றொரு வழக்கு கேரளாவின்  கோட்டியூர் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியை அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ராபின் நீண்ட காலமாக பலாத்காரம் செய்துள்ளார். இதில் கர்ப்பமான அந்த மாணவி அண்மையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். டிஎன்ஏ பரிசோதனையில் குழந்தையின் தந்தை பாதிரியார் ராபின் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார். இந்த மனு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது "கேரளாவில் என்ன தான் நடக்கிறது? பாதிரியார்களே பலாத்கார குற்றவாளிகளாக மாறுவது ஏன்" என்று நீதிபதிகள் கடும் கண்டனத்துடன் கேள்வி எழுப்பினர். "திருமணமான பெண்ணை 4 பாதிரியார்கள் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கு விசாரணையின் விவரங்களை உச்ச நீதிமன்றத்தில்  தாக்கல் செய்ய வேண்டும்" என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.