இந்தியா

ஆதார் - நடந்தது என்ன ?

ஆதார் - நடந்தது என்ன ?

webteam

ஏறக்குறைய 38 நாட்கள் விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஆதார் அடையாள அட்டை பெறுவது கட்டாயமா என்பது குறித்து அதன் செல்லுபடி குறித்தும் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. ஆதார் அட்டையை கட்டாயமாக்குவதை எதிர்த்து பல்வேறு தனிநபர்கள், அமைப்புகள் சார்பில் 2012-ல் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

* செப்டம்பர் 2013 - ஆதார் என்பது முழுக்க முழுக்க தாங்களாகவே மக்கள் முன்வந்து பெறும் ஒன்றாக இருக்க வேண்டும் ; யாரையும் பெறுமாறு கட்டாயப்படுத்த கூடாது ; அதே நேரத்தில் ஆதாரை வழங்க தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு

* 24 மார்ச் 2014 - ஆதார் இல்லை என்பதற்காக எந்த திட்டத்தையும் யாருக்கும் மறுக்க கூடாது 

* 11 ஆகஸ்ட் 2015 - பொது விநியோக திட்டம், எரிவாயு உருளை இணைப்பு பெற மட்டுமே ஆதார் கட்டாயம் ; வேறு எந்த சேவைக்கும் ஆதார் கட்டயாமல்ல என உச்சநீதிமன்றம் உத்தரவு

* 15 அக்டோபர் 2015 - மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று ஊரக வேலைவாய்ப்பு திட்டம், அனைவருக்கும் வங்கி கணக்கு, வைப்பு நிதி ஆகியவற்றுக்கும் ஆதார் கட்டாயம் என உச்சநீதிமன்ற தீர்ப்பு மாற்றம்

2017 ஆரம்ப கட்டத்தில் செல்போன் என் பெறவும் இன்னும் சில வசதிகளுக்கும் ஆதாரை செல்போன் நிறுவனங்கள் கட்டாயமாக்கின. - இடைக்கால தீர்ப்பு ஒன்றில் மறு உத்தரவு வரும் வரை செல்போன் எண் பெறவோ வேறு எந்த சேவைகளுக்கோ ஆதாரை கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்தது

18 ஜூலை 2017 - ஆதார் குடிமக்களின் அடிப்படை உரிமைக்கு எதிராக உள்ளதா  என ஆராய வேண்டிய கட்டாயம் உள்ளது என உச்சநீதிமன்றம் கருத்து ; அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றம் 

24 ஆகஸ்ட் 2017 - தனிமனிதனின் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையே என முன்னாள் நீதிபதி புட்டாசாமி தொடர்ந்த வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு ( ஆதாரும் அடிப்படை உரிமையை மீறுவதாக வழக்கு தொடரப்பட்டதால் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றது) 

17 ஜனவரி 2018 - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் ஆதார் செல்லுபடி ஆகுமா , ஆகாதா , ஆதார் அந்தரங்க உரிமையை மீறுவதாக உள்ளதா என்பதற்கான விசாரணை தொடங்கியது

10 மே 2018 - ஆதார் தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது