இந்தியா

பெண் ஊழியர்களுக்கு நாப்கின் இயந்திரம் அமைத்த மேற்கு ரயில்வே!

webteam

பெண் ஊழியர்கள் பயன்பெறுவதற்காக நாப்கின் பெட்டிகளை மேற்கு ரயில்வே திறந்துள்ளது.

மும்பையில் உள்ள சர்ஜ்கேட் ரயில் நிலையம் உட்பட 6 முக்கிய ரயில் நிலையங்களில் நாப்கின்கள் வழங்கும் இயந்திரங்களை மேற்கு ரயில்வே துறை திறந்துள்ளது. இதனை மேற்கு ரயில்வே தலைவர் அர்ச்சனா குப்தா இன்று திறந்து வைத்தார். அவருடன் மேற்கு ரயில்வே துறையின் மூத்த பெண் ஊழியர்களும் திறப்பு விழாவில் பங்கேற்றனர். மும்பை ஜர்ச்கேட் நிலையத்தில் நாப்கின் இயந்திரமும், வடோதரா, அகமதாபாத், ராட்லம், ராஜ்கோட் மற்றும் பாவ்நகர் ஆகிய 5 ரயில் நிலையங்களில் நாணயம் போட்டு நாப்கின் பெறும் இயந்திரமும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு ரயில்வே மக்கள் தொடர்பாளர் ரவீந்தர் பாகர், இது பெண் ஊழியர்களின் நலத்தினை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். அத்துடன் இத்திட்டம் ஒரு வரலாற்று மைல் கல் என பெண் ஊழியர்களே மகிழ்ச்சி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். இத்திட்டத்தை மேலும் பல ரயில் நிலையங்களுக்கு விரிவுபடுத்தவுள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.