மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்
மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் twitter
இந்தியா

மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு!

Prakash J

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 8ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 63,229 கிராம பஞ்சாயத்து இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளான பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகியவற்றிற்கு இடையே தேர்தல் பரப்புரையின்போது பல இடங்களில் மோதல் வெடித்தது. இதில் 12க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

என்றாலும் வன்முறைக்கு இடையிலேயும் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 80.71 சதவீத ஓட்டுகள் பதிவாகின. அதேநேரத்தில், வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட 697 வாக்குச்சாவடிகளில் நேற்று (ஜூலை 10) பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூலை 11) காலை முதல் நடைபெறத் தொடங்கியது. ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. மதியத்திற்கு பிறகு முடிவுகள் வெளியாகத் தொடங்கின. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது. மாலை நேர நிலவரப்படி முடிவுகள் அறிவிக்கப்பட்ட 23,344 இடங்களில் 16,330 இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. மேலும் 3,002 இடங்களில் முன்னிலையில் உள்ளது. கடும் போட்டியாக விளங்கிய பாஜக 3,790 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. 802 இடங்களில் முன்னிலை வருகிறது.

இந்த நிலையில், இன்று மேற்கு வங்கத்தில் உள்ள டயமண்ட் துறைமுகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.