இந்தியா

ராஜஸ்தான் ‘லவ் ஜிகாத்’ கொலை: கடும் தண்டனை வழங்க மம்தா கோரிக்கை

ராஜஸ்தான் ‘லவ் ஜிகாத்’ கொலை: கடும் தண்டனை வழங்க மம்தா கோரிக்கை

webteam

ராஜஸ்தானில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி முகமது அப்ரசூலை படுகொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி முகமது அப்ரசூல் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம்  பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இது மிகவும் சோகமான சம்பவம். இதைப்பற்றி கூட சிந்திக்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான மற்றும் முன்மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ராஜஸ்தானில் பணிபுரியும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சுமார் 3,500 தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து அம்மாநில அரசிடம் பேசியுள்ளதாக தெரிவித்தார்.

மேற்கு வங்க அரசு, முகமது அப்ரசூலின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளது. அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசாங்கத்தின் ஏனைய உதவிகளும் அவர்களுக்கு வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.