இந்தியா

"நாட்டிலேயே இந்த மாநிலத்தில்தான் கொரோனா உயிரிழப்பு அதிகம்" குற்றஞ்சாட்டிய மத்தியக் குழு !

jagadeesh

இந்தியாவிலேயே மேற்கு வங்கம் மாநிலத்தில் மட்டும்தான் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகம் என்று மத்திய அரசின் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தியா முழுவதும் இதுவரை 42,533 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1373 பேர் கொரோனா நோய் தொற்றால் பலியாகி இருக்கின்றனர். மேலும் இந்த நோயிலிருந்து 11,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர். கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மூன்றாவது முறையாக மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பச்சை, சிவப்பு, ஆரஞ்ச் மண்டலங்களுக்கு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சக் குழு இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறது. இந்தக் குழு மேற்கு வங்கம் மாநிலத்துக்கும் பயணித்து இப்போது அது குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளது. அதன்படி மேற்கு வங்க மாநில அரசு சோதனைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்று மத்திய குழு புகார் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் " மேற்கு வங்கத்தின் கொரோனா இறப்பு விகிதம் 12.8% என்பது இதுவரை நாட்டிலேயே மிக உயர்ந்ததாகும். இந்த மிக உயர்ந்த இறப்பு விகிதம். குறைந்த சோதனை மற்றும் பலவீனமான கண்காணிப்புக்கான தெளிவான அறிகுறியாக இருக்கிறது. மேலும் கொரோனா பாதிப்புகள் மாநில அரசின் பதிவுசெய்யப்பட்ட எண்ணிக்கையிலிருந்து, மத்திய அரசின் தகவல்கள் புள்ளிவிவரங்களிலில் முரண்பாடாக இருக்கிறுது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் தனிநபர்களை தினசரி கண்காணிப்பதாக மேற்கு வங்க அரசு கூறியுள்ள போதிலும், எந்த ஆதாரமும் அதற்கு இல்லை" என கூறப்பட்டிருக்கிறது.