இந்தியா

உச்சக்கட்டத்தில் மோதல்: ஆளுநர் உரை இல்லாமல் மேற்குவங்க பேரவை தொடங்கிய மம்தா!

உச்சக்கட்டத்தில் மோதல்: ஆளுநர் உரை இல்லாமல் மேற்குவங்க பேரவை தொடங்கிய மம்தா!

Sinekadhara

மேற்கு வங்கத்தில் ஆளுநர், முதல்வர் இடையேயான மோதலின் உச்சகட்டமாக, ஆண்டின் முதலாவது சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் உரையாற்ற ஆளுநருக்கு மாநில அரசு அழைப்பு விடுக்கவில்லை.

மேற்கு வங்க சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. ஆண்டின் முதலாவது கூட்டத் தொடரை எல்லா மாநில அரசுகளும் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். ஆனால், மேற்கு வங்கத்தில் மத்திய அரசு மற்றும் ஆளுநருடன் முதல்வர் மம்தா பானர்ஜி கடும் அதிருப்தி கொண்டுள்ள சூழலில், ஆளுநர் ஜகதீப் தன்கர் பேரவையில் உரையாற்ற மேற்கு வங்க அரசு அழைப்பு விடுக்கவில்லை. ஆளுநர் உரையில்லாத பேரவைக் கூட்டம் தொடங்கிய நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

மறுபுறம் மாநில அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து எதிர்க்கட்சிகளான இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் இந்தக் கூட்டத் தொடரையே புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கிடையே, சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தா காவல்துறையில் நேதாஜி படைப் பிரிவு தொடங்கப்படுவதாக அறிவித்தார்.