இந்தியா

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்

webteam

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாகிஸ்தான் அரசியல் தலைவர் பி.எம்.குட்டி காலமானார். அவருக்கு வயது 89.

கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள திருரில், 1930 ஆம் ஆண்டு பிறந்தவர் பி.எம்.குட்டி. இவர் பிரிவினையின் போது பாகிஸ் தான் சென்றார். அங்கு பத்திரிகையாளராக இருந்த அவர், அவாமி லீக், தேசிய ஜனநாயக கட்சி, பாகிஸ்தான் தேசிய கட்சி ஆகிய கட்சிகளில் பணியாற்றினார்.

பலூசிஸ்தான் ஆளுநரின் அரசியல் ஆசோகராகவும் செயல்பட்டு வந்தார். ’நான் ஏன் பாகிஸ்தானை தேர்வு செய்தேன்’ என்று அவர் எழுதிய அரசியல் சுயசரிதையின் மூலம் பிரபலமான அவர் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.