இந்தியா

அனல்காற்று படிப்படியாக குறைந்து மழை பெய்யும் - இந்திய வானிலை மையம்

அனல்காற்று படிப்படியாக குறைந்து மழை பெய்யும் - இந்திய வானிலை மையம்

webteam

நாளை மறுநாள் முதல் வெயில் மற்றும் அனல் காற்றின் தாக்கம் படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் அனல் காற்றும் வீசுகிறது. பல மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த வெயில் மற்றும் அனல் காற்றினால் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை மறுநாள் முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல வடகிழக்கு மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.  வங்கக் கடலில் இருந்து பலத்த காற்று வீசுவதால் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் மீனவர்கள் வட மேற்கு வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல தென்மேற்கு அரபிக் கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.