'கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்' என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார்.
அவரது உரையில், ''கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம்.
நான் உறுதியாக சொல்கிறேன். இந்தியா விரைவில் தன்னிறைவு பெறும். இந்தியா தன்னிறைவு பெற்றால்தான் பிற நாடுகளுக்கு உதவ முடியும். உலகை வழிநடத்தக் கூடிய இடத்திற்கு இந்தியா வர வேண்டும். உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் கொடுப்போம் என்பதே நாம் உச்சரிக்க வேண்டிய மந்திரம்” என தெரிவித்தார்.